வந்தாச்சு அலர்ட்…7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Author: Aarthi Sivakumar
8 August 2021, 5:20 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வங்க கடல் பகுதியில் ஆகஸ்டு 8ம் தேதி மற்றும் ஆகஸ்டு 9ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆக.8 முதல் ஆக.10 வரை தென்கிழக்கு இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்டுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் அறிவித்துள்ளார்.

Views: - 607

0

0