வந்தாச்சு அலர்ட்…கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!!

Author: Aarthi Sivakumar
29 July 2021, 5:17 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நாளை வரை கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும், ஏனைய பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

வரும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 இலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று மற்றும் நாளை, வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 இலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 இலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று முதல் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 291

0

0