மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : கோயம்புத்தூர் வெதர்மேன் கணிப்பு

1 August 2020, 10:41 am
Cbe Rain - Updatenews360
Quick Share

கோவை : கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஆகஸ்டில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சந்தோஷ் கிருஷ்ணன் (கோயம்புத்தூர் வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாம் முன்பு எதிர்பார்த்தது போலவே மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ,ஆகஸ்ட் முதல் வாரத்தில் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும்.

இதனால் கனமழை ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை தொடர அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த கனமழை காரணமாக ஆகஸ்ட் முதல் வார இறுதியில் மேட்டூர், அணை ,பவானி சாகர் அணை, பில்லூர், சிறுவாணி ,அமராவதி ஆழியாறு, வைகை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவிரைவாக உயரக்கூடும்.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாக கூடும். பாலக்காடு கணவாய் மற்றும் மேற்கு கோயம்புத்தூரில் மிதமானது முதல் கனமழை பதிவாக கூடும்.

நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி, வால்பாறை, தேனி நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மலைப்பிரதேசங்களில் அதிதீவிர கனமழை ஆகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் பதிவாக கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு சேலம் ஆகிய நகரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் பிற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது லேசான சாரல் மழை ஆகஸ்ட் 2ல் இருந்து பெய்யக்கூடும். தென் தமிழகத்திலும் இதே சூழ்நிலை நிலவும். சென்னை உட்பட வடக்கு தமிழகம் மட்டும் டெல்டாவில் ஆங்காங்கே மிதமான மழை பதிவாக கூடும்.

எனவே விவசாய மக்கள் இந்த மழைக்கு ஏற்ப தங்களது விவசாய பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்கு கோயம்புத்தூரில் வெங்காய விவசா செய்வோர் மட்டும் தங்களது அறுவடையை விரைவாக முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு சந்தோஷ் கிருஷ்ணன் கூறினார்.

Views: - 7

0

0