5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

10 July 2021, 4:56 pm
Quick Share

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிறவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைவதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பூர், விருதுநகர் ,தூத்துக்குடி, திருச்சி, சேலம் ,தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

வருகின்ற 12ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கன மழையும், கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென்காசி ,திருப்பூர், கன்னியாகுமரி ,திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வருகின்ற 13 மற்றும் 14ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வானிலையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை ,தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாலும், மலைப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்பதை நாளும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் , மன்னார் வளைகுடா பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் ,தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 74

0

0