அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!!

8 November 2020, 3:45 pm
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Heavy Rain Alert - Updatenews360

அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Views: - 17

0

0