கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

25 December 2020, 4:40 pm
Cbe Rain - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 28 மற்றும் 29ம் தேதி ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

chennai metrology - updatenews360

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை 1 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வடக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

Views: - 15

0

0