தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2021, 1:42 pm
Rain Warn - Updatenews360
Quick Share

தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயமுத்தூர் தேனி. திண்டுக்கல், தென்தாசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுந்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுநிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அதிகபட் வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசை ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 276

0

0