அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!

Author: Aarthi
3 October 2020, 3:24 pm
Heavy rain - updatenews360
Quick Share

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 57

0

0