10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!

14 July 2021, 3:42 pm
Rain - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுபட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதுபோன்று, தேனி, திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு 5 நாட்களும், கேரள கடல் பகுதிக்கு 3 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 97

0

0