தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

30 December 2020, 10:26 am
Rain-Updatenews360
Quick Share

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமா மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 2ஆம் தேதி வரை கடலோர மாவட்டமான கன்னியாகுமரி பகுதயிலி 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீன்வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 16

0

0