5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…18 மாவட்டங்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Author: Aarthi Sivakumar
21 August 2021, 4:39 pm
Quick Share

சென்னை: சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Rain Warn - Updatenews360

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

Rain -Updatenews360

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வபோது, கனமழையும் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

வரும் 21ம் முதல் 25ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 256

0

0