தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

22 February 2021, 11:07 am
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சனி இரவு ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 19 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

Views: - 0

0

0