அவினாசி சாலை மேம்பால பணி: பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டம்..!!

Author: Aarthi Sivakumar
30 August 2021, 12:36 pm
Quick Share

கோவை: அவிநாசி சாலை மேம்பால பணி காரணமாக பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, அவிநாசி ரோட்டில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பில்லர் அமைக்கும் பணிக்காக, பஸ் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து வரும் பேருந்துகள், எல்.ஐ.சி., சிக்னலில் சந்திப்பில் இடதுபக்கம் திரும்பி, ஜெயில் ரோட்டை அடைந்து, பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.

அதன்பின், பாரதியார் ரோடு மற்றும் பாலசுந்தரம் ரோடு வழியாக, அண்ணாசிலை சிக்னல் அடைந்து பீளமேடு நோக்கி செல்ல வேண்டும். காந்திபுரத்தில் இருந்து வரும் பேருந்துகளும் பாரதியார் ரோடு, பாலசுந்தரம் ரோடு வழியாக, அண்ணாசிலை செல்லலாம்.

இந்த தற்காலிக மாற்றம் குறித்து, போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 358

0

0