திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது விபத்து..!! கணவன் மனைவி பலியான சோகம்…!!

9 December 2019, 12:57 pm
Quick Share

செங்கல்பட்டு : திருமண நிகழ்ச்சிக்காக சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாப உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் ECR சாலையில் சென்னையில் இருந்து காரைக்காலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகக்க சென்னையை சேர்ந்த தம்பதியினர் சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடித்து கொண்டு மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் வேமகாக சென்றதாக கூறப்படுகறிது. அபபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டிவந்த சென்னையைச் சேர்ந்த அப்துல் வகாப் மற்றும் அவரது மனைவி சுஜிதா வகாப் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த சட்ராஸ் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.