அவசர பணிகளுக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு தகவல்..!!

10 May 2021, 9:59 am
spare bus - updatenews360
Quick Share

சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன; தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ பேரில்‌, போர்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌, அத்தியாவசிய மற்றும்‌ அவசரப்‌ பணிகளுக்கு அரசு போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌
ஆர்‌.எஸ்‌.ராஜ கண்ணப்பன்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

பொதுமக்களின்‌ நலன்‌ கருதி, இரண்டு வாரக்‌ காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, அத்தியாவசியப்‌ பணிகளான மருத்துவம்‌, பொது சுகாதாரம்‌, குடிநீர்‌, மின்சாரம்‌, பால்‌ மற்றும்‌ அரசின்‌ முக்கிய துறைகளில்‌ குறைந்த அளவில்‌ பணியாற்றுமாறும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில்‌, அரசின்‌ பல்வேறு துறைகளைச்‌ சார்ந்தவர்கள்‌ பணிக்கு வருகின்ற வகையில்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, முதற்கட்டமாக 200 பேருந்துகள்‌ இன்று முதல்‌ முக்கிய வழித்தடங்களில்‌ இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதல்‌ பேருந்துகள்‌ இயக்கப்படும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 102

0

0