அறிவுரை கூறியவருக்கு அரிவாள் வெட்டு : கை விரல் துண்டானது!!
23 August 2020, 11:45 amசென்னை : வாகனத்தில் வேகமாக வர வேண்டாம் என இளைஞரிடம் அறிவுரை கூறிய இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கன்னிகாபுரம் ஜோசப் தெருவில் எட்வின் (வயது 19) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வண்டி ஓட்டி சென்றுள்ளார்.
தெருவிற்குள் குழந்தைகள் விளையாடுவார்கள் என்பதால் , வேகமாக செல்லக் கூடாது என்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முரளி மோகன் , விஜய் ஆகிய 2 நபர்கள் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த எட்வின் , நண்பர்களை அழைத்து வந்து அரிவாளால் வெட்டியதில் , முரளி மோகனின் கை விரல் துண்டானது. மற்றொரு நபருக்கு கையில் வெட்டு விழுந்துள்ளது.
அரிவாளால் வெட்டிய எட்வின் (வயது 19 ) , சூரியா (வயது 20) , ஸ்ரீதர் (வயது 19) , ரீகன் (எ) சந்தோஷ்குமார் (வயது21) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.