பணம் கொடுத்தால் மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்வார் : ரூ.5 டாக்டரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி..!!!

19 December 2020, 4:34 pm
Quick Share

சென்னை : சென்னையில் ரூ. 5க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரனின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது வீட்டிற்கு சென்று பொதுமக்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.

சென்னையை அடுத்துள்ள கால்பாக்கம் அருகே இருக்கும் கொடைப்பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன். தனது கிராமத்தில் முறையான மருத்துவ சிகிச்சை இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருவதைக் கண்டு, மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் மருத்துவம் படித்து முடித்தார்.

இதையடுத்து, 1971ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறிய கிளின் ஒன்றையும் ஆரம்பித்தார். தனது கிளினிக்கிற்கு வரும் ஏழை, எளிய மக்களிடம் ரூ.5க்கு மேல் கட்டணம் வாங்காமல், தனது வாழ்க்கையின் இறுதி வரையில் அதனையே செய்துது வந்தார். தன்னிடம் வரும் வசதி படைத்த நோயாளிகள் பணம் கொடுத்தால், அதில் மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொண்டு, இல்லாதவர்களுக்கு அதனை இலவசமாக வழங்குவார்.

இதனால், சென்னை மக்களின் அன்புக்குரிய மருத்துவராக வலம் வந்தார். இப்படிப்பட்ட குணம் கொண்ட டாக்டர் ஜெயச்சந்திரன், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என பல்வேறு அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று டாக்டர் ஜெயச்சந்திரனின் 2வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று காலை முதலே பொதுமக்கள் அவரது வீட்டிற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இன்றைய நாளில் அவரது வீட்டில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பிரதான சாலை ஒன்றுக்கு டாக்டர் ஜெயச்சந்திரனின் பெயரை சூட்ட வேண்டும் என வடசென்னை மக்கள் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 1

0

0