ரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு!!

Author: Udayachandran
27 July 2021, 8:49 pm
Valimai Poster Cubic -Updatenews360
Quick Share

சென்னை : நடிகர் அஜித்தின் வலிமை பட போஸ்டரை 955 ரூபிக் க்யூப்புகளால் போஸ்டரை உருவாக்கி சிறுவர்கள் அசத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது அசாத்திய திறமையால் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். தல என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பாலும், தனி நிகர் திறமையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

இவர் நடித்து வரும் வலிமை திரைப்படத்தை வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த ஒரு வருடாக வலிமை படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி மோசன் போஸ்டர் வெளியானது.

பெரும் வரவேற்பை பெற்ற வலிமை பட மோசன் போஸ்டர், வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட மோசன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றது. வலிமை படத்தின் மோசன் போஸ்டர் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த தர்ஷன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர், 955 ரூபிக் க்யூப்ளால் வலிமை படத்தின் போஸ்டரை உருவாக்கி அசத்தியுள்ளனர். தத்ரூபமாக புகைப்படங்களை வடிவமைத்த சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை கொளத்தூரை சேர்ந்த சிறுவன் சாய் சித்தார்த் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைடப்படத்தை தத்ரூபமாக வரைந்து பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித் போஸ்டர் வரைந்து அசத்தியுள்ளார்.

Views: - 287

7

0