காதலர்களை மிரட்டி ஓட விட்டு பெண்களை பலாத்காரம் ‘போலி போலீஸ்’..! : நிஜ போலீசிடம் சிக்கிய ரேப்பிஸ்ட் சைக்கோ..!

22 September 2020, 7:00 pm
chennai - rape accust - updatenews360
Quick Share

சென்னை : காதலர்களுடன் வரும் பெண்களை, போலீஸ் என மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த சீரியல் ரேப்பிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மணலியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடமிருந்த கைப்பையில் 15 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் திருடு போய்விட்டதாக மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் புகாரின் அடிப்படையில் அப்பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த பெண் தனது கள்ளக் காதலனுடன் மாதவரம் அருகே உள்ள பால் பண்ணை பகுதியில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது போலீஸ் என கூறிக் கொண்டு ஒருவர் அவர்களை மிரட்டி போட்டோ எடுத்து, இந்த போட்டோக்களை உன் குடும்பத்தில் காட்டி விடுவேன் என சொல்லி உடன் வந்தவரை விரட்டி விட்டுள்ளார். அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தற்கு பிறகு, அந்தப் பெண்ணிடம் கைபையில் இருந்த 15 ஆயிரத்தையும், ஒரு செல்போனையும் பறித்து கொண்டு சென்று விட்டார் என கூறினார்.

இதுபற்றி மாதாவரம் சரக துணை ஆணையர் டாக்டர் பாலகிருஷ்ணன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை உடனே பிடிக்க தனிப் படை அமைத்து பால்பண்ணை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். மாதவரம் பால்பண்ணை அருகில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த டிப்டாப் வாலிபர் தண்டையார்பேட்டையை சேர்ந்த டிக்கிமணி ( 33) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்

இவர் தான் போலி போலீஸ்காரர் எனவும், அப்பகுதியில் கள்ளக்காதல் மற்றும் காதலர்களை மிரட்டி அவர்கள் அழைத்து வந்த நபரை அடித்து உதைத்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர் எனவும், இவர் மீது பல காவல் நிலையங்களில் வழிப்பறி செய்தவர் என தெரியவந்தது.

இவரை புழல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களிடம் இது போல் வன்முறையாக பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் செங்குன்றம் புழல் ஏரி பகுதிகளில் காதலர்களை மிரட்டி உடலுறவுக்கு அழைத்ததாகவும் இத் தொழிலை சுமார் நான்கு வருடங்களாக தொடர்ந்து செய்வதாக விசாரணையில் தெரியவந்தது

மேலும் இந்த போலி போலீஸ்காரரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை புகார் கொடுக்காத காரணத்தினால் சரியான விபரங்கள் தெரியவில்லை எனவும் போலீசார் கூறுகின்றனர். இவரை கைது செய்த புழல் போலீசார் இவர் மேல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த சிறப்பு படையினரை மாதவரம் சரக துணை ஆணையாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0