பாதிப்பு ஓகே… பலிதான் இன்னும் கட்டுக்குள் வரல..! சென்னையில் இன்றைய பலி எவ்வளவு தெரியுமா..?

13 August 2020, 11:27 am
Quick Share

சென்னை: கொரோனா தொற்றால் சென்னையில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா தமிழகத்தை உலுக்கி வருகிறது. கொரோனா மையமாக இருந்த தலைநகர் சென்னையில் இப்போது பாதிப்புகள் சற்றே குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும் பலி எண்ணிக்கை வேகம் எடுத்துள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை 12 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனா பாதிப்பால் சேர்க்கப்பட்டு இருந்தனர். சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் இறந்துள்ளனர்.

இதேபோன்று ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளில் தலா 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.