“சென்னை வருபவர்களை தனிமை படுத்தும் பணி தீவிரம்” – அதிகாரிகள் நடவடிக்கை..!

19 August 2020, 5:40 pm
Quick Share

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமை படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் இயங்க அரசு அனுமதி வளங்கியுள்ளது.

மேலும், இ.பாஸ் பெருவதையும் தமிழக அரசு எளிமை படுத்தியுள்ளது. இதனால், கொரோனா ஊரடங்கின்போது சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்த பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இதனால், கடும் கட்டுப்பாடுகளோடு இருக்கும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமை படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்துங்கள் என அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0 View

0

0