தங்கம் வாங்க ஏற்ற நேரம்… இன்று மளமளவென குறைந்த தங்கம் விலை… மீண்டும் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் விற்பனை!!

Author: Babu Lakshmanan
6 July 2022, 11:11 am
Quick Share

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மளமளவென குறைந்துள்ளது.

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும். பெரும்பாலும் முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால், தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.

அதன்படி இன்று தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 காசுகள் குறைந்து,கிலோ ரூ.62,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 135

0

0