மகிழ்ச்சியோ… மகிழ்ச்சி…. இன்றும் இறங்கு முகத்திலேயே தங்கத்தின் விலை..!
3 September 2020, 10:54 amசென்னை : வாரத்தின் தொடக்கத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.
கொரோனா சமயத்தில் தங்கம் வாங்க யாரும் முன்வராத நிலையில், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக எப்படி உயர்ந்தோ, அதே போல இறங்கி வந்தது.
ஆனால், வாரத்தின் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், நேற்றைய தினம் போலவே இன்றும் தங்கம் விலை சரிந்து காணப்பட்டுள்ளது.
இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.34 சரிந்து ரூ. 4,877ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.272 அதிகரித்து ரூ. 39,016க்கும் வர்த்தகமாகிறது. இதேபோல, சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1600 குறைந்து ரூ.73300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0
0