பம்பர் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘குட்டு‘ : தடையை நீக்க முடியாது என திட்டவட்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 1:28 pm
Bumper HC Order -Updatenews360
Quick Share

சென்னை : கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசு 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பொதுமக்களின் நலன் கருதியே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை, மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Views: - 176

0

0