பாலியல் வன்கொடுமைகளுக்கான பூமியாக மாறியுள்ள இந்தியா – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

By: Aarthi
1 October 2020, 5:47 pm
highcourt - updatenews360
Quick Share

சென்னை : பாலியல் வன்கொடுமைகளுக்கான பூமியாக இந்தியா மாறியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின் போது, திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி முறையீடு செய்தார்,
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி, விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Views: - 43

0

0