“சிறையில் இருந்தால்தான் புத்தி வரும்” மணல் கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் காட்டம்..!

2 September 2020, 10:38 am
Quick Share

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் 15 பேர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் ஏ.டி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால் குற்றம் அதிகரிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே இல்லாமல் போய்விடும் சூழல் ஏற்படும் என்று தெரிவித்த நீதிபதி, அடுத்த தலைமுறை குடி தண்ணீருக்கு திண்டாடும் அவல நிலை ஏற்படும் எனவும் அறிவுறுத்தினர்.

முன்ஜாமீன் நிபந்தனையாக 25 ஆயிரம் ரூபாய் விதித்தாலும் அதை எளிதாக செலுத்தி விட்டு குற்றத்தை மீண்டும் செய்வதில் கடத்தல் கும்பல் ஈடுபடுவதாக சாடிய நீதிபதி, இனரி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது என்றும் சில நாள் சிறையில் இருந்தால்தான் சரிவரும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

Views: - 8

0

0