சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் : குடியரசு தலைவர் ஒப்புதல்

31 December 2020, 6:34 pm
sanjeeb banerjee - updatenews360
Quick Share

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். இந்தப் பரிந்துரையை குடியரசு தலைவர் ஏற்கும்பட்சத்தில், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

கொலிஜியம் அமைப்பின் இந்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில், சஞ்சீவ் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: - 5

0

0