வெடிகுண்டு தாக்குதலில் காவலர் உயிரிழந்த சம்பவம் : எதிர்கட்சிகளின் செயலால் உயர்நீதிமன்றம் வேதனை..!

24 August 2020, 5:51 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : ரவுடி நடத்திய வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் காவலர் உயிரிழந்தது குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை அருகே தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுப்பதற்காக சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த காவலர் சுப்ரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய ரவுடியும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டான்.

இந்த நிலையில், ரவுடியை பிடிக்க சென்ற போது, வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் காவலர் உயிரிழந்தது குறித்து எதிர்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், காவலர் உயிர் மட்டும் உயிராக தெரியவில்லையா..? என்று எதிர்கட்சிகளுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், சமூக விரோதிகளை ஒழிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

Views: - 7

0

0