நோட்டீசும் இல்ல…. மாற்று இடமும் தரல… தடபுடலாக வீடுகளை இடித்து வெளியே தள்ளீட்டாங்க : கண்ணீர் விடும் ஆர்.கே. நகர் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
30 July 2021, 4:45 pm
chennai house - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் உள்ள ஆர்கே நகர் பகுதியில் பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டது.

அரும்பாக்கத்தில் உள்ள ஆர்கே நகரின் கூவம் ஆற்றுப்பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டதாகவும், விரைவில் காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று போலீசாருடன் வந்த அதிகாரிகள் தடபுடலாக வீடுகளை இடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது. எந்தவித நோட்டீஸோ அல்லது வீடுகள் இடிக்கப்படுவதற்கான முறையான வழிமுறைகள் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையினால் நிர்கதியாக தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், “240 வீடுகளில் முதற்கட்டமாக 90 வீடுகளை இடித்துள்ளனர். மாற்று வீடுகளைக் கூட அரசு வழங்காமல் மக்களை வெளியேற்றியுள்ளனர். முறையான நோட்டீஸ் வழங்கப்படவில்லை. வெறும் பென்சிலால் வீட்டின் வாசலில் குறித்து வைத்துக் கொண்டு போனார்கள். மாற்று வீடு கேட்டதற்கு தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால், இதுவரையில் அதுபற்றி எந்த தகவலும் இல்லை. இப்படியிருக்கையில் நாங்கள் எப்படி வீட்டை காலி செய்ய முடியும்,” என்கின்றனர்.

இதனிடையே, பட்டியலின மக்களின் உரிமைக்காக போராடுவதாகக் கூறி வரும் திருமாவளவன் தற்போது அமைதி காப்பது ஏன்..? திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாலா…? என்றும் வசை பாடி வருகின்றனர்.

Views: - 183

0

0