மலைபோல குவிந்த பாலியல் புகார்… கலாஷேத்ரா கல்லூரியில் 4 ஆசிரியர்கள் போட்ட காம ஆட்டம்.. 31 மணிநேரம் நீடித்த மாணவிகளின் போராட்டம் வாபஸ்..
Author: Babu Lakshmanan31 மார்ச் 2023, 6:50 மணி
கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் புகார் குறித்தான விரிவான விசாரணை அறிக்கை திங்கட்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் உள்ள கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட நான்கு நபர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக 170க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளாக போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி, இந்த கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை செய்து திங்கள்கிழமைக்குள் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும்,
சில மாணவிகள் ஹைதராபாத் சென்றுள்ளதால் ஐந்து மாணவிகளை ஸ்கைப் மூலமாகவும், 12 மாணவிகளை நேரில் விசாரணை செயததாகவும் கூறினார்.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்துள்ளதாக கூறிய அவர், மாணவிகள் புகார் அளித்ததற்கான ஆதாரங்களும் உள்ளதாகவும், திங்கள் கிழமை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால் போராட்டத்தை நிறுத்த சொல்லி மகளிர் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்ததாகவும், மாணவர்களும் போராட்டத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர் என்றும் கூறினார்.
நான் இங்கு விசாரணைக்கு வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்றும், கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் இங்கு இல்லை என்பதால், அவர்களிடம் நான் விசாரணை நடத்தவில்லை என்றும், கல்லூரி முதல்வர் மட்டும் என்னை பார்த்தார் என தெரிவித்தார். போராட்டத்தை முடக்குவதற்கான வேலையை நிர்வாகம் செய்வதாகவும் மாணவிகள் என்னிடம் புகார் அளித்துள்ளனர், என கூறினார்.
இதனிடையே, 31 மணிநேரமாக மாணவிகள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
0
0