காதல் தோல்வியடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…

Author: Udayaraman
31 July 2021, 7:53 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி கோபால் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் நரேஷ் குமார்.இவர் அமைந்தகரையில் உள்ள கார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நரேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த படுக்கை அறையில் இரும்பு கம்பியில் வேட்டியில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் நரேஷ் குமார் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது நரேஷ் குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக செம்பியம் காவல  துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற செம்பியம் போலீசார் நரேஷ்குமார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நரேஷ் குமார் என்பவர் அவர் வேலை செய்யும் இடத்தின் அருகே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் இந்த காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் நரேஷ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 101

0

0