அரை நிர்வாணமாக பெண் சாலையில் மறியல் போராட்டம்.. காவல்துறையினரிடம் வாக்குவாதம் : சென்னையில் திடீர் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
6 November 2021, 10:55 am
Quick Share

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணமான முறையில் பெண் ஒருவர் மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருப்பது மெரினா கடற்கரை. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இப்படியிருக்கையில், கடற்கரைசாலையில் நேற்றிரவு பெண் ஒருவர் அரைநிர்வாணமாக மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணகி சிலை அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் குடிபோதையில் தனது கணவருடன் மறியலில் ஈடுபட்ட அந்தப் பெண், சாலையில் அங்கும் இங்குமாய் திரிந்து கொண்டிருந்தார். அவரை சாலையில் வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்கள் பார்த்துக் கொண்டே சென்றனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், தனது கணவரை யாரோ சிலர் தாக்கி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். மேலும், அந்தப் பெண்ணும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

தீபாவளி பண்டிகை சமயத்தில் பொதுமக்களின் கூட்டம் மெரினாவில் அலைமோதிய நிலையில், பெண் ஒருவர் அரை நிர்வாணமாக சாலையில் திரிந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 573

1

0