சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் பறந்தது மெட்ரோ! நேரம் கொஞ்சம் மாற்றம்!!
10 September 2020, 10:54 amசென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தததையடுத்து முதற்கட்டமாக விமானம் நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீள வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது.
இரண்டாம் கட்டமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ செல்லும் ரயில் சேவை நெற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் மற்ற நேரங்ககளில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
0
0