டியூட்டியில் இருந்த கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி : அப்பல்லோவில் குவிந்த காவல்துறை!!!

Author: Babu Lakshmanan
14 October 2021, 5:56 pm
Shankar jival - updatenews360
Quick Share

சென்னை : சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால். இவர் வழக்கம் போல, தனது காவல்துறையின் பணிகளை கவனித்து வந்துள்ளார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பணியில் இருந்த காவல் ஆணையருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பது சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 246

0

0