தமிழகத்தில் நீடிக்கும் படுக்கை பற்றாக்குறை அவலம் : சென்னையில் ஆம்புலன்சிலேயே 3 நோயாளிகள் பலி

13 May 2021, 11:39 am
rajiv gandhi hospital - updatenews360
Quick Share

சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாததால், ஆம்புலன்சிலேயே 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனிடையே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக மேலும் 3 நோயாளிகள் ஆம்புலன்சிலே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 845 படுக்கை வசதி உள்ளது. இந்த அனைத்து படுக்கைகளும் நிரம்பியதால் புதிதாக வரும் நோயாளிகள் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கின்றனர்.

Views: - 93

0

0