கடந்த 30 ஆண்டுகளில் நவ.,1ம் தேதி தான் பெஸ்ட்… இது சென்னையின் புதிய வரலாறு… வானிலை ஆய்வு மையம் தலைவர் சொன்ன விஷயம்..!!

Author: Babu Lakshmanan
1 November 2022, 2:34 pm
Quick Share

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பதிவான மழை கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழைகளில் முதலிடம் எனவும், 72 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிகபட்ச மழை என என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு பகுதியில் நிலவுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரீரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டர், பெரம்பூரில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 3 தினங்களை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரீரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரீரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், மன்னார்வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது வரை பெய்துள்ள வடகிழக்கு பருவமழை 29 சதவீதம் வழக்கத்தை விட குறைவான மழை பதிவாகும்.சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் ஒன்றும் தேதி மட்டும் இதுவரை 72 ஆண்டுகளில் மூன்றாவது மிகப்பெரிய மழை எனவும், கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச மழையில் முதலிடம் எனவும் தெரிவித்தார்.

Views: - 336

0

0