சாலையில் செல்லும் பெண்களின் அங்கங்களை தொட்டு சில்மிஷம் : போலீஸின் பொறியில் சிக்கிய சைக்கோ காமன்கள்..!!

Author: Babu Lakshmanan
11 August 2021, 6:59 pm
Chennai crime - updatenews360
Quick Share

சென்னை அருகே தனியாக சாலையில் செல்லும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து இளைஞர்கள் சிலர் பாலியல் சீண்டல்களை செய்து வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இந்த சூழலில், நேற்று கீழ்ப்பாக்கம் ஏடிஎம்முக்குள் பணம் எடுக்கச் சென்ற இளம்பெண்ணை பின் தொடர்ந்து உள்ளே சென்ற இளைஞர் அத்துமீறி சில்மிஷம் செய்துள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஏடிஎம்மின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், சில்மிஷத்தில் ஈடுபட்டது ஒருவர் அல்ல, இருவர் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, செல்போன் எண்களை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் இரும்பேடு பகுதியைச் சேர்ந்த கவிதாசன் (25) மற்றும் கொளத்தூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதில், கவிதாசனுக்கு ஏற்கனவே திருமணமாகியதும், குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை தாக்கி வழக்கில் சிறை சென்று வந்ததும் கண்டறியப்பட்டது. பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் அழகான பெண்களை பார்க்கும் போது பெண்களின் மார்பகத்தில் கை வைத்தும், பின்புறத்தில் கைவைத்தும் ஆசையை தீர்த்துக் கொள்வதாகவும் அவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஒருநாளைக்கு சுமார் நான்கு பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விடுவதும், அவ்வாறு கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெண்களிடம் இருந்து கைப்பை மற்றும் செல்போன்களையும் அவர்கள் பறித்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 398

0

0