கத்தியை காட்டி மிரட்டி கடுக்கனை பறித்த இளைஞருக்கு காப்பு மாட்டிய போலீசார்..!!!

17 December 2020, 7:14 pm
arrest -updatenews360
Quick Share

சென்னை அருகே சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டிமிரட்டி இருசக்கர வாகனத்தை திருடிய வழிபறி கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை அனகாபுத்தூர் நேசமணி தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன் (54). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த போது, திடீரென வந்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் வீண் வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதுடன், காதில் அணிந்திருந்த தங்க கடுக்கன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து, சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சத்தியசீலன், சங்கர் நகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வந்த நிலையில், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த புனிதன் (24) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து தங்க கடுக்கன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0