சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

3 September 2020, 6:05 pm
Quick Share

தமிழகத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலவாரியாக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியோரிடம் பிரமதர் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 31ஆம் தேதி முதல் 3.0 பொது முடக்கம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முன்னதாக, அதை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளை படிப்படியாக ஏற்படுத்தி, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வேயிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 4.0 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் வரும் 7-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை – மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை – கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Views: - 6

0

0