துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் “திடீர்“ அனுமதி!!
20 September 2020, 10:23 amசென்னை : தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னை அமந்தக்கரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 24ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பி.எஸ், மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் மே 25ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்டடார்.
இந்த நிலையில் மீண்டும் 3 மாதம் கழித்து தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதயத்துக்கான பரிசோதனை செய்யப்பட்டு இன்று மதியமோ அல்லது மாலையோ அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.