அட்மின் என கூறிவிட்டு ஓடி ஒளிவது ஆண்மையா? ஹெச். ராஜா பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!!

20 August 2020, 2:12 pm
Jayakumar H Raja - Updatenews360
Quick Share

சென்னை : டுவிட்டரில் ஒரு கருத்தை கூறிவிட்டு அட்மின் போட்டுவிட்டார் என்று கூறி ஓடி ஒளிவது ஆண்மையா என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா, கர்நாடகாவில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதியுண்டு, அது ஆண்மையுள்ள அரசு என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன் சென்னையில் செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆண்மையள்ள அரசு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதிமுக அரசை உரசிப்பார்க்க வேண்டாம் என ஹெச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

உயர்நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்பது தான் ஆண்மையா என ஹெச்.ராஜா செய்த செயலை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இளம் கன்று பயமறியாது என்பது போல பாஜகவினர் சிலர் செயல்பட்டு வருகின்றனர் என கூறினார்.

மேலும் ஹெச்.ராஜாவின் ஆண்மை பற்றி அனைவருக்கும் தெரியும், டிவிட்டரில் ஏதோ ஒன்றை போட்டுவிட்டு அட்மின் போட்டுவிட்டார் என கூறி ஓடி ஒளிவது ஆண்மையா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதிமுகவை உரசிப் பார்க்க வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 40

0

0