சென்னை டூ திருவள்ளூர்.. சைக்கிளிங் மேற்கொண்ட சைலேந்திரபாபு : காவல் நிலையங்களில் அதிரடி ஆய்வு !!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 2:29 pm
Sylendra Babu -Updatenews360
Quick Share

சென்னை : தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு சைக்கிளிங் மேற்கொண்டு காவல்நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு டிஜிபியாக பொறுப்பேற்றது முதல் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று அவர் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு சைக்கிளிங் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோப்புகளை சரிபார்த்த அவர், குற்றச்சம்பவங்கள் குறித்தும், அதற்கு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின், காவலர்களின் குடியிருப்புக்கு சென்ற டிஜிபி சிறுவர்களின் சிலம்பாட்டத்தை பார்த்து மகிழ்ந்தார்.

Views: - 243

0

0