பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலையில் நேற்று எந்த மாற்றமுமில்லாத நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ .5,500 ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,505 ஆகவும், சவரனுக்கு ரூ . 128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
திருப்பூர் முன்னாள் மேயரும், அமமுக மாவட்ட செயலாளருமான விசாலாட்சியின் மகள் தீபிகா - சிவஹரி திருமண வரவேற்பு விழாவில், அக்கட்சி…
டாப் நடிகை தென்னிந்தியா, பாலிவுட் என இந்தியாவின் இரண்டு பிரதான திரைத்துறைகளில் டாப் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். “லக்”…
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…
பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…
This website uses cookies.