சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வந்தது முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. இதனால், சென்னையில் கடந்த 137 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 22ம் தேதியன்று திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 46வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வருகிறது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.