சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதன் மூலம், 45வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 22ம் தேதியன்று திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதனை தொடர்ந்து சென்னையில் மே 23ம் தேதியன்று பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 482வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாயின.
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று…
ராமின் பறந்து போ… இயக்குனர் ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில்…
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு…
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
பபுள்கம் மென்றபடி போஸ் கொடுத்த சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை…
This website uses cookies.