பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் கோவை பின்னுக்கு தள்ளிய சென்னை : தமிழக கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 7:38 pm
TN Corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில 1,630 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,60,553ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 184 பேருக்கும், செங்கல்பட்டுவில் 117 பேருக்கும், ஈரோட்டில் 121 பேருக்கும், திருப்பூரில் 86 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,643 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 07ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 119

0

0