இரட்டை சதத்தை நோக்கி சென்னை.. ஒற்றை இலக்கு எண்களில் 20 மாவட்டங்கள் : இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2021, 7:41 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் புதிதாக 612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 612 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 45 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 638 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 194 பேருக்கும், கோவையில் 84 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 190

0

0