செங்கோட்டை, நாகர்கோவில் – சென்னை வரும் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு : தெற்கு ரயில்வே

14 November 2020, 6:51 am
chennai train emu - updatenews360
Quick Share

செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு (வண்டி எண் : 06182) வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 4 படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இன்று இயக்கப்படும். இதேபோல, செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயிலில் ஒரு படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இன்று முதல் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 6 படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டி இன்று முதல் இணைக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 23

0

0

1 thought on “செங்கோட்டை, நாகர்கோவில் – சென்னை வரும் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு : தெற்கு ரயில்வே

Comments are closed.