கொரோனாவில் இருந்து மீண்ட சிங்கங்கள் : நல்ல செய்தியை வெளியிட்ட வண்டலூர் பூங்கா நிர்வாகம்!!

Author: Babu
23 July 2021, 7:44 pm
vandalur zoo lion - updatenews360
Quick Share

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவிலுள்ள கோவிட்‌ குறித்த மூன்று சிங்கங்களின்‌ நாசி மற்றும்‌ மலக்குடல்‌ திரவ மாதிரிகள்‌ SARS Cov-2 மறு ஆய்வுக்காக 09.07.2021 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர்‌ பாதுகாப்பு விலங்கு நோய்கள்‌ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து மாதிரிகளும்‌ ஆய்வு செய்ததில்‌ SARS Cov-2 எதிர்மறை நோய்‌ பாதிப்பு இல்லை என முடிவுகள்‌ 14.07.2021 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர்‌ பாதுகாப்பு விலங்கு நோய்கள்‌ ஆய்வு நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

மேலும்‌ அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவிலுள்ள 5 விலங்குகளுக்கான நாசி மற்றும்‌ மலக்குடல்‌ திரவ மாதிரிகளை 17.07.2021 அன்று விலங்கு நோய்களுக்கான தேசிய உயர்‌ பாதுகாப்பு விலங்கு நோய்கள்‌ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி அவை அனைத்துமே. நோய்‌ இல்லை என SARS Cov-2 என 23.07.2021 அன்று தெரியப்படுத்தியுள்ளது.

இதனால்‌ அறிஞர்‌ அண்ணா உயிரியல்‌ பூங்காவிலுள்ள அனைத்து 13 சிங்கங்களின்‌ தற்போது பரிசோதனை செய்ததில் SARS Cov-2 வைரஸ்‌ பாதிப்பு எதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சிங்கங்களும்‌ மிளுருவாக்கம்‌ பெற்று எந்தவொரு கோவிட்‌ அறிகுறிகளும்‌. சிக்கல்களும்‌ இல்லாமல்‌ தற்போது நல்ல நிலையில்‌ உள்ளன. இருந்தபோதிலும்‌ வைரஸ்‌ பாவுவதை கருத்தில்‌ கொண்டு சிங்கங்களின்‌ உடல்‌ நிலையை மிகவும்‌ உண்ணிப்பாக வனஉயிரின மருத்துவர்குழு மற்றும்‌ களப்பணியாளர்கள்‌ தொடர்ந்து அனைத்து நேரமும்‌ கண்காணித்து வருகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 174

0

0