பெண்களை இழிவுபடுத்தியதாக கண்டனம் ஒருபுறம் : மனுஸ்மிருதி நூலுக்கு தடை கோரி விசிக போராட்டம் மறுபுறம்..!

24 October 2020, 5:27 pm
thiruma- updatenews360
Quick Share

சென்னை : பெண்களை இழிவுபடுத்தியதாக திருமாவளவனுக்கு கடும் கண்டங்கள் எழுந்து வரும் நிலையில், மனுஸ்மிருதி நூலுக்கு தடை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அண்மையில் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள், ஆண்களுக்கு கீழானவர்கள் அவர்கள், தீட்டு உடையவர்கள் எனக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஆனால், இந்தக் கருத்துக்கள் அனைத்தும் சனாதன நூலான மனுஸ்மிருதியில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

திருமாவளவனின் இந்தப் பேச்சிற்கு குஷ்பு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மனு ஸ்மிருதி நூலுக்கு தடை விதிக்கக் கோரி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதேபோல, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களை இழிவாகப் பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மனுஸ்மிருதி நூலுக்கு தடை கோரி அவரே போராட்டம் நடத்தியிருப்பது வேடிக்கையாகியுள்ளதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 22

0

0